நாடு முழுவதும் ரயில் இணைப்பு - புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி | PM Modi |ThanthiTV

Update: 2025-01-06 13:55 GMT

நாடு முழுவதும் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில்வே இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சர்லபள்ளி புதிய முனைய நிலையம், சுமார் 413 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர்மோடி திறந்து வைத்தார். மேலும், கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் தெலுங்கானா உள்பட நாடு முழுவதும் ரயில் இணைப்பை மேலும் மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்