கேரள நர்ஸுக்கு மரண தண்டனை... உயிரை காக்க உள்ளே வந்த ஈரான்... உலகமே காத்திருக்கும் சேதி கிடைக்குமா?

Update: 2025-01-03 15:23 GMT

ஏமனில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவை மீட்க ஈரான் உதவ முன்வந்திருப்பது குறித்து விவரிக்கிறது

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு பிழைப்பு தேடி ஏமனுக்கு சென்றார்.

2011-ல் இடுக்கியை சேர்ந்த டோமி தாமசை திருமணம் செய்துக்கொண்டு சனாவுக்கு சென்றார். இருவருக்கும் குழந்தை பிறந்ததும், கிடைத்த ஊதியத்தால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் குழந்தையையும்... கணவரையும் 2014-ல் கேரளாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

அங்கேயே வேலை செய்தவர், சிறிய கிளினிக்கை தொடங்க முயற்சித்துள்ளார். ஏமன் சட்டப்படி உள்ளூர் நபர் பங்குதாரராக இருந்தால் மட்டுமே மருத்துவமனை தொடங்க முடியும் என்பதால், அந்நாட்டை சேர்ந்த மருத்துவர் தலோல் அப்டோ மஹ்தியுடன் இணைந்து மருத்துவமனை தொடங்கியிருக்கிறார்.

அதேவேளையில் ஏமனில் உள்நாட்டுபோர் தீவிரமடைய 2015-ல் இந்தியா ஆபரேஷன் ரஹாத் என இந்தியர்களை மீட்டது.

ஆனால்... பெருமளவு கடன் வாங்கி தொடங்கிய மருத்துவமனையை விட்டுவிட்டு செல்ல மனமில்லாத நிமிஷா பிரியா அங்கேயே தங்கியிருக்கிறார். இந்திய அரசாங்கம் ஏமனுக்கு பயண தடையை விதித்தது.

மருத்துவமனை நன்றாக செயல்பட மஹ்தி செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நிமிஷா பிரியா பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, அவரை உடல்ரீதியாகவும் துன்புறுத்த தொடங்கியிருக்கிறார். உள்ளூர் போலீசில் தகவல் தெரிவித்தும் ஒன்றும் நடக்காத நிலையில், 2017 ஜூலையில் மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை எடுத்துவிட்டு தப்ப முயற்சி செய்திருக்கிறார். அதுவே விபரீதம் ஆகியிருக்கிறது. அதிகளவு மயக்கமருந்து செல்ல மஹ்தி மரணம் அடைந்துவிட்டார்

இதனையடுத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாக்கு 2020-ல் சனா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்க, 2023 அந்நாட்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக அவரது மரண தண்டனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத்.

இதனையடுத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாக்கு 2020-ல் சனா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்க, 2023 அந்நாட்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக அவரது மரண தண்டனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத்.

அதேவேளையில் ஹூத்தி கிளர்ச்சிக்குழுவுடன் ஈரான் நட்பு பாராட்டுகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு உதவ ஈரான் முன்வந்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கையில் நிமிஷா பிரியாவை மீட்க எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வோம் என ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு மாதத்திற்குள் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. மகளையும், கணவரையும் பிரிந்து மரணத்தின் விளிம்பில் நிமிஷா பிரியா மீட்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பே நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்