5,479 பேரை காவு வாங்கிய விஷவாயு.. நாடே நடுங்கிய சம்பவம்.. 3 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றம்
மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள, 'யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984-ம் ஆண்டு விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5 ஆயிரத்து 479 பேர் உயிரிழந்தனர். மூடப்பட்ட இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77 ஆயிரம் கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வந்தது. இது தொடர்பாக விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தது. உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, விஷவாயு ஆலை கழிவுகளை அகற்றும் பணிகள் மிகுந்த பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. லாரிகளில் மறுசுழற்சி செய்யும் மையத்துக்கு கொண்டு சென்று எரிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அந்த சாம்பலை பல அடுக்கு பாதுகாப்புடன் கூடிய பைகளில் அடைத்து, மண் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்காத வகையில் புதைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.