கர்நாடகாவில் அங்கன்வாடி கட்டட மேல்சுவர் இடிந்து 4 குழந்தைகள் காயம்..
கர்நாடக மாநிலம் கோலாரில் அங்கன்வாடி கட்டிடத்தின் மேல்சுவர் இடிந்து விழுந்து, குழந்தைகள் காயம்
கோலார் மாவட்டத்தின் தாசர ஹொசஹள்ளியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மேல்சுவர் இடிந்து விழுந்து, குழந்தைகள் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது கட்டிடத்தில் மொத்தம் 7 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் நால்வருக்கு தலையில், கைகளில், மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த குழந்தைகளுக்கு உடனே மருத்துவ உதவி வழங்கப்பட்டது, இப்போது அவர்களின் நிலைமை ஆபத்தற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த குழந்தைகள் தற்பொழுது பங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இக்கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சம்பவத்தால் பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.