திரையரங்க கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கு = நம்பள்ளி நீதிமன்றத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வருகை
அல்லு அர்ஜுன் நணம்பள்ளி நீதிமன்றத்தை இன்று வருகை
நீதிபதி முன்னிலையில் அல்லு அர்ஜுன் ஜாமீன் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டார்
சந்தியா தியேட்டர் கூட்டு நெரிசலில் பெண் இறந்த வழக்கில் தனக்கு வழக்கமான ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அல்லு அர்ஜுன் சார்பில் நம்பள்ளி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதோடு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் 2 பாண்ட் பத்திரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கட்பல்லி காவல் நிலையத்திற்குச் சென்று காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் அல்லு அர்ஜுன் தலையிடவோ, இன்ஃப்ளேன்ஸ் செய்யக்கூடாது
நீதித்துறையின் அனுமதியின்றி அல்லு அர்ஜுன் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனக் கூறப்பட்டது.
இன்று நடிகர் அல்லு அர்ஜுன் நம்பள்ளி நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் இன்று வருகை தந்து
நீதிபதி முன்னிலையில் அல்லு அர்ஜுன் ஜாமீன் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டார்