பூமிக்கடியில் சிக்கி துடிக்கும் 10 வயது சிறுவன் உயிர் - குலைநடுங்க வைத்த பகீர் சம்பவம்
மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் பிபால்யா என்னும் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான சுமித், 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இதுதொடர்பான தகவல் கிடைத்தவுடன், சிறுவனை மீட்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை தோண்டும் பணிகள் நடைபெற்றது. தற்போது வரை 25 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ள நிலையில், சிறுவனுக்கு குழாய் மூலம் தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.