காதலை ஏற்க மறுத்த பெண் - இளைஞர் செய்த பகீர் காரியம்... உ.பியில் அதிர்ச்சி

Update: 2025-01-06 08:18 GMT

உத்தரபிரதேசத்தில், இளைஞர் ஒருவர், சாலையின் நடுவே பெண்ணின் கழுத்தை துப்பட்டாவால் நெரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்ரோஹா மாவட்டத்தில், ராகுல் என்ற இளைஞர் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதனை அந்தப் பெண் ஏற்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், ஸ்கூட்டியில் அந்தப் பெண் சென்றபோது அவரை கீழே தள்ளிவிட்டு அவரது துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெரிக்க முயன்றார். பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்ட நிலையில், தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்