ஒரே நாளில் இவ்வளவு பேரா? - கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. திணறும் சபரிமலை

Update: 2025-01-01 14:27 GMT

புத்தாண்டின் முதல் நாளான இன்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் 10 மணி நேரமாக தரிசனத்திற்காக காத்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில், மகர விளக்கிக்காக கடந்த 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் தினம் தினம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் 10 மணி நேரமாக காத்திருந்தனர்.

இதுவரை 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கானோர் காத்திருந்தனர். பம்பை, நீலிமலை, அப்பாச்சி மேடு,சரங்கத்தி நடைப்பந்தல் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டு, பின்பு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் ஐயப்ப பக்தர்கள் பத்து மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்