300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. துடி துடித்து பலியான 5 வீரர்கள்
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் சென்ற ராணுவ வாகனம் திடீரென 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த விரைவுப்படையினர் மருத்துவ உபகரணங்களுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்