நடுக்காட்டில் சிக்கிய குடும்பம்... கூடவே இருந்து குழியில் தள்ளிய சாத்தான்... இரவெல்லாம் அதிர வைத்த Rescue

Update: 2024-12-06 13:56 GMT

கோவாவுக்கு சுற்றுலா சென்ற ரஞ்சித்தாஸ் என்பவரின் குடும்பம், சிறோலி மற்றும் ஹெம்மடகா இடையிலுள்ள பாதை வழியாக செல்லும்போது இந்த இக்கட்டிற்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். கோவா செல்வதற்காக கூகுள் மேப்பில் பதிவு செய்துவிட்டு கூகுள் மேப் காட்டிய திசையில் பயணித்த போது, அது காட்டு வழி பாதையை காட்டியுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்த பின், அதற்கு பிறகு வழி இல்லை என தெரிய வந்தது. வேறு வழியை தேர்வு செய்யலாம் என மொபைலை எடுத்து பார்த்த போது அங்கு நெட்வொர்க் இல்லாததால், சிக்கல் அதிகரித்தது. அது குறுகிய பாதை என்பதால் காரை திருப்ப முடியாமல் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் ரிவர்ஸிலேயே வந்துள்ளனர். அப்போது செல்போனில் சிக்னல் வந்த பின், போலீஸ் அவசர உதவி எண் 112க்கு தொடர்பு கொண்டுள்ளனர். இதை அடுத்து அவர்களின் இருப்பிடத்தை இரவு முழுவதும், தேடி விடியற்காலையில் கண்டறிந்த போலீசார், அந்த குடும்பத்தை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்