தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது முக்கியமல்ல, பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்வதுதான் முக்கியம் என, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்ணாமலை தனது கட்சி வேலையை மட்டுமே செய்கிறார் என்றும், அவர் மாநிலத்தை விட கட்சிக்கு அதிக விசுவாசம் காட்டுகிறார் என்றும் தெரிவித்தார்.