வழுக்கைத் தலையை கிண்டல் செய்த மனைவி.. மன விரக்தியில் த*கொலை செய்த கணவன்

தலையில முடி இல்லங்கிற ஒரே காரணத்துகாக கணவன கேலி கிண்டல் செஞ்சு வேதனைக்கு ஆளாக்குனது மட்டுமில்லாம,
பொய் கேஸ் கொடுத்து சிறைக்கு அனுப்பி இருகாங்க இங்க ஒரு ரீல்ஸ் மகாராணி. உச்சகட்ட மன உளைச்சளுக்கு ஆளான கணவர் எடுத்த விபரீத முடிவுக்கு யார் பொறுப்பு?
இந்த காமெடி சீன்ஸ பாத்து நம்மல்ல பெரும்பாலானவங்க, விழுந்து விழுந்து சிரிச்சிருப்போம்.
ஒரு வேள இதெல்லாம் உருவ கேலினு யாரவது சுட்டி காட்டியிருந்தா அவங்க ஓவர் பொலிட்டிக்கள் கரெக்ட்னஸ் பாக்குறாங்கனு கலாய்ச்சுட்டு இருந்திருப்போம்..
ஆனா இது மாதிரியான உருவகேலிகளால, சம்மந்தப்பட்டவங்களோட வாழ்கை எப்படி பாதிக்கும்ங்கிறதுக்கு சாட்சி தான் கர்நாடகாவுல நடந்த இந்த தற்கொலை..
தன்னோட வழுக்க தலைய, மனைவியே கேலி கின்டல் செஞ்சத தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்து போயிருக்காரு ஒரு கணவர்.
கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் உடிகாலா பகுதிய சேர்ந்தவர், 32 வயசான பரமசிவமூர்த்தி. 26 வயச தாண்டும் போது எல்லாருக்கும் வர முக்கியமான பிரச்சினை இவரையும் தாக்கி இருக்கு.
சீப்ப எடுத்து தலையில வச்சா, கொத்துக் கொத்தா முடி கொட்ட ஆரம்பிச்சிருக்கு. ஒரு வேள பரமசிவமூர்த்தி லாரி டிரைவரா இருந்ததால, அதனால ஏற்பட்ட உடல் உஷ்னம் கூட அதுக்கு ஒரு காரணமா இருந்திருக்கலாம். ஆனா அத பத்தி எல்லாம் அவர் கவலப்படாம தன்னோட வேலையில மட்டுமே கவனம் வச்சு, வாழ்க்கையில முன்னுக்கு வந்திருக்காரு.
இரண்டு வருசத்துக்குளவே பரமசிவமூர்த்திக்கு முன்பகுதி மொத்தமா வழுக்கையா மாறிடுச்சு. இதனால நண்பர்கள் சிலர் கேலி செஞ்சாலும் அத பரமசிவமூர்த்தி பெருசா கண்டுக்காம இருந்திருக்காரு.
ஆன கூடவே சேர்ந்து வாழப்போறவங்க வழுக்கைய ஒரு குறையா நினச்சிட கூடாதுனு எல்லா ஆம்பளைங்க மாதிரியே பரசிவமூர்த்திக்கும் கொஞ்சம் பயம் இருக்க தான் செஞ்சது.
ஆனா அவர் பயந்த மாதிரி இல்லாம, பரசிவமூர்த்தியோட மனசு மட்டும் போதும்னு சொல்லி தான் மம்தா என்ற பெண் கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருக்காங்க.
இவங்க தாண்டா நமக்கு ஏத்த ஜோடினு ரொம்பவே சந்தோசமா கழுத்துல தாலியகட்டி இருக்காரு பரமசிவமூர்த்தி.
கல்யாணம் ஆன 2 வருசமும் தம்பதிகளோட வாழக்கை நல்லாதான் போயிருக்கு, ஆனா எந்த பாய் பெஸ்ட்டி கண்ணுபட்டதோ தெரியல, சில மாசத்துக்கு முன்னாடி இருந்து மம்தாவோட நடவடிக்கை எல்லாம் மொத்தமா மாறிடுச்சு.
குறிப்பா, பரமசிவமூர்த்தியோட வழுக்க தலைய வச்சு கேலி செஞ்சது மட்டுமில்லாம,"உன் மூஞ்சிக்கு என்ன மாதிறி அழகான பொண்ணு கேக்குதானு" வாய்க்கு வந்தபடி எல்லா பேசி கணவரோட மனச நோகடிச்சிருகாங்க மம்தா.
இதுமட்டுமில்லாம, எப்பவும் இன்ஸ்டாகிராம்ல ஃபோட்டோ , போஸ்ட் ரீல்ஸ்னு இணைய ராணியா மாறுன மம்தா, 4 ஹார்டின் கமென்ட்ட பார்த்ததும், தன்ன ஒரு செலிபிரெட்டியா உணர தொடங்கி இருக்காங்க.
இது கணவன் மனைவிக்கு இடையில இருந்த பிரச்சினைய இன்னும் அதிகமாக்கியிருக்கு.
இதனால பரமசிவமூர்த்தி தன்ன அடிச்சு கொடும படுத்துறதாவும், வரதட்சனை கேட்டு மிரட்டுறதாவும் சொல்லி காவல் நிலையத்துல புகார் கொடுத்து, கணவர சிறைக்கும் அனுப்பி வச்சிருக்காங்க.
அதோட அவர் கட்டுன தாலிய கழட்டி வீசிட்டு, சிங்கில் தான் கெத்துன்னு ஸ்டேஸ் போட்டிருக்காங்க மம்தா. இது அத்தனைக்கும் காரணம் தன்னோட வழுக்கதானேனு நினச்சு மன வேதனையில இருந்த பரமசிவமூர்த்தி கடைசியில துக்குப்போட்டு தற்கொலையே செஞ்சுக்கிட்டரு.
நடந்தத அத்தனையும் தன்னோட தற்கொலை கடிதத்துல அவர் எழுதி வச்சுருந்ததா சொல்லப்படுது. இது சம்பந்தமா வழக்குபதிவு பண்ணின போலீஸார் விசாரிச்சுட்டு இருகாங்க.
உண்மையாவே மம்தா ஏற்படுத்துன மன உளைச்சல் தான் பரமசிவமூர்த்தியின் சாவுக்கு காரணம்னு தெரியவந்தா சட்டம் தன் கடமைய செய்யும்..