147 வருட வரலாறு.. ஐசிசி தரவரிசையில் புதிய சாதனை படைத்த பும்ரா

Update: 2025-01-01 15:21 GMT

            147 வருட வரலாறு.. ஐசிசி தரவரிசையில் புதிய சாதனை படைத்த பும்ரா

  • ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்று, இந்திய வீரர் பும்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
  • இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்திய வீரர் பும்ரா 907 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
  • இதன்மூலம் கடந்த 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில், ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
  • இதற்கு முன்னதாக இந்திய வீரர் அஷ்வின் 904 புள்ளிகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்