செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. தவிர்க்கவே முடியா வெற்றிகள் - தொட முடியா உயரத்தில் இந்தியா

Update: 2025-01-02 03:18 GMT

விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இஸ்ரோ, வரும் 25ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில்100வது ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பல முக்கிய மைல்களை அடைந்து வருகிறது இஸ்ரோ அமைப்பு..

இந்தியா விண்வெளியில் இரண்டு தனித்தனி செயற்கைகோள்களை ஒன்றாக இணைக்கும் முதல் சோதனைக்கான, ஸ்பேடெக்ஸ் செயற்கைகோள்களை பிஎஸ்எல்விசி 60 ராக்கெட் மூலம் அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

தற்போது, 2025ம் ஆண்டு புத்தாண்டில், தனது100வது திட்டத்தை செயல்படுத்தவுள்ளது இஸ்ரோ..

இது தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்,

ஜனவரியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-ஆவது ராக்கெட்டை ஏவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ரக ராக்கெட்டாகும். இதில் நம் நாட்டைச் சேர்ந்த என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தல் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இது வழிசெலுத்துதல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோரை அழைத்து விழாவை வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறிகையில், ISRO 2025ல், GSLV மூலம் நெவிகேஷன் செயற்கைக்கோள் NVS-02 ஐ ஜனவரியில் ஏவுவதுடன் பல மிஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்