உத்தரப்பிரதேசத்தில், பாலத்தில் இருந்து சரக்கு லாரி விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள பாலம் மீது, உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தில் இருந்து விழுந்தது. சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.