நாட்டிலேயே முதன்முறை... தேசமே எதிர்பார்த்த மெகா திட்டம்... நாளை தொடங்கி வைக்கிறார் PM மோடி

Update: 2024-12-24 12:11 GMT

மத்திய பிரதேசத்தில் 2 நதிகளை 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

தேசிய நதிநீர் இணைப்பு கொள்கையில் முதல்முறையாக நாட்டில் இரண்டு நதிகள் இணைக்கப்பட உள்ளன. மத்திய பிரதேச மாநிலம் பன்னா புலிகள் காப்பகம் பகுதியில் கென் நதியில் அணையை கட்டி, அங்கிருந்து கால்வாய் வழியாக பெத்வா நதிக்கு நீரை கொண்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 221 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைத்து உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் 8.70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதியை பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கென்-பெத்வா நதிகள் இணைப்பு திட்டத்தின் மதிப்பீடு 44 ஆயிரத்து 605 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100 ஆவது பிறந்தநாளில் பிரதமர் மோடி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்