தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம்,
தேர்தல் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் நடத்தை விதி எண் 93-2-ஏஇல் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதால், வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பொதுமக்கள் பார்வையிட கோர முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.