இயக்குனர் வீடு தேடி சென்ற தேவயானி - போன் காலில் பேசியது என்ன? | Devayani
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிக்குச் சென்ற நடிகை தேவயானி, தன்னை பிரபலம் அடையச் செய்த இயக்குநர் அகத்தியனின் சகோதரியை சந்தித்து நலம் விசாரித்தார்.
பேராவூரணியில் புதிய உணவக திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த அவர், திரைப்பட இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி என்பதை அறிந்து வியப்படைந்தார். இயக்குநர் அகத்தியன் சென்னையில் வசித்து வரும் நிலையில் , அவருடைய பூர்விக வீடு எங்கே இருக்கிறது என விசாரித்துச் சென்று, அகத்தியனின் சகோதரியை சந்தித்து நலம் விசாரித்தார். தனது வீட்டிற்கு தேவயானி வந்ததை அறிந்த இயக்குநர் அகத்தியனிடம், இதுகுறித்து தொலைபேசியில் செய்தியாளர்கள் கேட்டபோது, சினிமாவில் நன்றி மறவாத நடிகைகளில் தேவயானியும் ஒருவர் என்றும், என் மகளைப் போன்றவர் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.