"எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை" - நடுங்கும் மக்கள்
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா கேட், லூதி கார்டன் உள்பட பல இடங்களில் அடர் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால், நடைபயிற்சி சென்றவர்கள், சிரமத்தை சந்தித்தனர். காற்றின் தரம் மோசமான பிரிவில் நீடிக்கும் நிலையில், வெப்பநிலையும் குறைந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர். இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. குளிரில் நடுங்கும் பொதுமக்கள், சாலையோரங்களில் நெருப்பு மூட்டி, குளிர் காய்கின்றனர். அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்திலும் அடர் பனிமூட்டம் நிலவியது. 4 அடி தூரத்தில் வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு சாலைகள் பனி சூழ்ந்து காணப்பட்டது. கடும் பனிப்பொழிவால் வடமாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது