சபரிமலை கோயில் கார்த்திகை சீசன் வருமானம் இவ்வளவா? - வாயை பிளக்க வைத்த `கோடி’

Update: 2024-12-16 06:14 GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 29 நாள்களில் 22 லட்சத்து 67 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ள நிலையில், 163 கோடியே 89 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.. சபரிமலை மண்டல மகரவிளக்கு டிசம்பர் 14 அன்று துவங்கி 29 நாள்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை

22 லட்சத்து 67 ஆயிரத்து 956 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் பக்தர்கள் அதிகம் வந்துள்ளனர்.

அதேபோல் கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற வருவாயை விட இந்த ஆண்டு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது... மண்டலகால பூஜை முடிவதற்குள் மேலும் 15 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்