இனவெறியில் பும்ரா மீது வன்மத்தை கக்கிய வர்ணனையாளர்.. உலகமே எதிர்த்ததும் அடிபணிந்தார்
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர் பும்ராவை இனவெறியுடன் குறிப்பிட்ட வர்ணனையாளர் மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையும் வர்ணனையாளருமான இஷா குகா,, பும்ராவை பிரைமேட் (primate) எனக் குறிப்பிட்டார். பிரைமேட் என்பது பாலூட்டிகளையும், குறிப்பாக குரங்கினத்தையும் குறிப்பிடும் வார்த்தை ஆகும்... இஷாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இஷா, எந்த உள்நோக்கத்துடனும் அப்படி கூறவில்லை என்றும் தவறான வார்த்தையை தேர்வு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.