திரையிடப்படும் 177 படங்கள் - கேரளாவுக்கு படையெடுத்த மக்கள்
கேரளாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 177 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 29வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 13ம் தேதி துவங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவனந்தபுரம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 15 திரையரங்குகளில் 68 நாடுகளில் இருந்து 177 திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 13 ஆயிரம் பிரதிநிதிகள் இவ்விழாவில் பங்கேற்று திரைப்படங்களை காண்பதற்கான நுழைவுச்சீட்டுகள் பெற்றுள்ளனர். இதனால் ஒவ்வொரு திரையரங்கின் முன்பும் கேரளா மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து திரைப்படங்களை கண்டு களித்து வருகின்றனர்.