``ஆணவம்.. அகங்கார திமிரின் உச்சம்’’ - வயநாடு நபரை காரில் கட்டி இழுத்து சென்ற டூரிஸ்ட்ஸ்

Update: 2024-12-16 07:34 GMT

கேரள மாநிலம் வயநாட்டில் பழங்குடியின நபரை அரை கிலோ மீட்டர் தூரம் சுற்றுலாப் பயணிகள் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணந்தவாடி குடக்கடவில் தடுப்பு அணை பார்ப்பதற்காக இரு கார்களில் வந்த சுற்றுலா பயணிகளுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நபர் மாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாதனை சுற்றுலாப் பயணிகள் காரில் இழுத்துச் சென்றுள்ளனர். பலத்த காயம் அடைந்த மாதன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்