ஜூனியர் மகளிர் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மஸ்கட் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணியும் தலா ஒரு கோல் அடித்தன. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 3க்கு 2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது