மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை - காங்கிரஸ் வாக்குறுதி | Congress

Update: 2025-01-06 13:43 GMT

டெல்லியில் மகளிருக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. விரைவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் காஸி நிஜாமுதின் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் முதல் வாக்குறுதியை டெல்லியில் வெளியிட்டனர். அதன்படி, கர்நாடகாவை போன்று டெல்லியிலும் பியாரி திரி என்ற பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்த முதல் நாளிலேயே திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம் ஆத்மி சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் 2100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் பெண் வாக்காளர்களை கவர அதேபோன்று வாக்குறுதி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்