ஆழ்துளையில் இருந்து 10 நாளுக்கு பின் மீட்கப்பட்ட சிறுமி -உள்ளே சென்று தூக்கி வந்த திக்..திக்..காட்சி

Update: 2025-01-02 03:41 GMT

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 10 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்ட நிலையில், சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கோட்புட்லி பகுதியை சேர்ந்த சேத்தனா என்ற மூன்று வயது சிறுமி, 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இதனையடுத்து, சிறுமியை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் களம் இறங்கினர். ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமிக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், ஆழ்துளை கிணற்றுக்கு அருகே குழிதோண்டி சிறுமியை மீட்கும் பணி நடைபெற்றது. பல்வேறு இடையூறுகளுக்கு இடையே 10 நாட்களுக்குப் பின் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்