உடலை துளைத்த 7 குண்டுகள் - ஹாஸ்பிடலுக்குள் பெண் டாக்டர் சுட்டுக் கொலை.. நடுங்க வைக்கும் சம்பவம்
பீகார் மாநிலம் பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் பெண் டாக்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் சுர்பி ராஜ் (Surbhi Raj), மாலை மூன்றரை மணியளவில் அவரது அறையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், ஐசியூவில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, டாக்டர் உயிரிழந்தார். 7 முறை சுடப்பட்டதாக தெரிய வந்துள்ள நிலையில், கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.