எப்போது என்ன ஆகுமோ... இடிந்து விழும் நிலையில் நூலகம் - குமுறும் புவனகிரி மக்கள்
கடலூர் மாவட்ட புவனகிரி கிளை நூலக கட்டிடம், முற்றிலும் சேதமடைந்துள்ளதால், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நூலக கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு வருகை குறைந்து விட்டதாகவும், தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் கொடுத்த நிலையில், தற்போது தான் அதிகாரிகள் வந்து பார்ப்பதாக, புவனகிரி மக்கள் தெரிவித்துள்ளனர்.