"தரம் தாழ்ந்த பேச்சு..." விம்மி விம்மி அழுத டெல்லி முதல்வர் அதிஷி | Atishi Marlena

Update: 2025-01-06 14:15 GMT

செய்தியாளர் சந்திப்பின்போது டெல்லி முதல்வர் அதிஷி விம்மி விம்மி அழுதார். டெல்லி தேர்தலில் கால்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷிக்கு எதிராக, பாஜக சார்பில் ரமேஷ் பிதூரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரசாரத்தின்போது அதிஷி தனது தந்தையை மாற்றிவிட்டார் போல என ரமேஷ் பிதூரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, இந்திய அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகும் என தான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேச முடியாமல் அதிஷி விம்மி அழுதார்.

Tags:    

மேலும் செய்திகள்