காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக, அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி... குரல் வாக்கெடுப்புக்கு பின், டிவிஷன் முறையில் தோல்வி அடைந்த தீர்மானம்...
- உள்கட்சி பிரச்சினையை திசை திருப்பவே, சபாநாயகருக்கு எதிராக அதிமுக தீர்மானம் கொண்டு வந்ததாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... அப்பாவு நடுநிலையோடு தான் செயல்படுகிறார் என்றும் விளக்கம்...
- சபாநாயகர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்... தீர்மானம் வெற்றி பெறுவதை விடவும், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதே அவசியம் எனவும் பேச்சு...
- சபாநாயகருக்கு எதிரான அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த ஓ.பி.எஸ்... சபாநாயகர் போதுமான வாய்ப்பு கொடுக்காததால், ஆதரித்திருக்கலாம் என ஈ.பி.எஸ். கருத்து...
- டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த, அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது... தடுப்பு காவலில் வைத்திருந்த போலீசார் மாலை 6 மணிக்கு மேல் விடுவித்தனர்...
- ஏப்ரல் முதல் வாரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவிப்பு..... அறவழி போராட்டத்தை அனுமதிக்காத போலீசாரை இனி தூங்க விட மாட்டோம் என்றும் ஆவேசம்....
- டெல்லி பாணியில் முதலமைச்சரை குறிவைக்கும் பாஜகவின் வியூகம் தமிழகத்தில் எடுபடாது என அமைச்சர் ரகுபதி பதிலடி... ஆயிரம் கோடி ஊழல் என அமலாக்கத்துறை கூறும் நிலையில், ஆதாரம் எங்கே என்றும் கேள்வி...
- தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி... இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்றால், அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி....
- தமிழகத்தில் மது விலக்கு கொண்டுவந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி... இளம் விதவைகள் அதிகரிக்கிறார்கள் என்றால், அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி....
- திமுக உடனான மறைமுக கூட்டு வெளிவர தொடங்கியதால், வாய்க்கு வந்ததை எல்லாம் அண்ணாமலை பேசி வருகிறார்... அடுத்த தேர்தலிலும் பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அண்ணாமலைக்கு தவெக பதிலடி...
- அதிமுகவை உடைக்க நினைப்பவர்களின் மூக்கு உடைந்துபோகும் என ஈபிஎஸ் ஆவேசம்... செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றும் விளக்கம்...
- கரூர் பரமத்தி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவான வெப்பம்... வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் அவதி...
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் அலை எழும் என எச்சரிக்கை.... பொதுமக்கள் கடற்கரை பரப்புக்கு செல்வதை தவிர்க்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அறிவுறுத்தல்...