பிரியங்கா காந்தி கேட்ட கேள்வி.. வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் ஏற்றிய அமித் ஷா
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரிங்கா காந்திக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, பேரழிவுகள் அரசியலுக்கான விவகாரமாக இருக்கக் கூடாது என்றார். பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில், மனிதநேயத்திற்கும், இரக்கத்திற்கும்
முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வயநாடு மக்கள் மத்திய, மாநில அரசுகளை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகவும், அவர்களுக்கு சாக்குப்போக்கு தேவையில்லை என்றார். மத்திய, மாநில அரசுகள் வயநாடு மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்