``ஹலோ நான் கலெக்டர் கலைச்செல்வி பேசுறேன்’’ - ஆன்-ஸ்பாட்டில் அதிரடி ஆக்ஷன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காதது குறித்து பழங்குடியின மக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தொலைபேசியில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மனு அளித்த பெரும்பாலன பழங்குடியின மக்கள், தங்களுக்கு வேறு முகவரியில் ரேஷன் அட்டைகள் இருப்பதால் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று முறையிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட அதிகாரிக்கு தொலைபேசியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அவர்களுக்கு உடனடியாக ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிட்டார். துரிதமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பழங்குடி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.