மொத்த ஹாலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்து உலகளவில் முஃபாசா - தி லயன் கிங் செய்த தரமான சம்பவம்
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ’முஃபாசா - தி லயன் கிங்’ திரைப்படம், உலகம் முழுவதும் மூவாயிரத்து 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தி லயன் கிங் திரைப்படத்தின் முன்கதையாக வெளியான ’முஃபாசா - தி லயன் கிங்’ திரைப்படம், இந்தியாவில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தியில் 46 கோடியே 98 லட்ச ரூபாயும், தெலுங்கில் 16 கோடியே 84 லட்ச ரூபாயும், தமிழில் 23 கோடியே 65 லட்ச ரூபாயும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.