ஆர்.ஜே.பாலாஜி படத்திற்கு வந்த சிக்கல்.. கோர்ட்டில் பரபரப்பு மனு | RJ Balaji

Update: 2025-01-06 14:28 GMT

சொர்க்கவாசல் திரைப்படத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கதாபாத்திரத்திற்கு கட்டபொம்மன் என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். தவறான செயல்களை செய்யும் கதாபாத்திரத்திற்கு கட்டபொம்மனின் பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர், இந்த படத்தை ஓ.டி.டி போன்ற பொது ஊடகங்களில் வெளியிட தடை விதிப்பதோடு, படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, இதுகுறித்து திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர், தமிழக திரைப்பட துறையின் முதன்மைச் செயலர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்