காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
பா.ஜ.கவின் போராட்டம் இனிவரும் காலங்களில் இன்னும் தீவிரமாகும் என அண்ணாமலை உறுதி...
வெற்றி தோல்வியை தாண்டி தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவே பாஜக போராடுகிறது என்றும் பேட்டி...
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கருத்து...
தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் உறுதி...
மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... .
இறுதி மரியாதை செலுத்திய பின்னர் மாலை சென்னை திரும்புகிறார்.......
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.......
டெல்லியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைப்பு...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 200 ரூபாய் உயர்வு...
ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை...