நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 'சவதீகா' என பெயரிடப்பட்ட இந்த பாடலில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷாவின் ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே உள்ளது. பாடலில் விடாமுயற்சி படத்தின் காட்சிகளோ, நடிகர் அஜித்தின் காட்சிகளோ இல்லாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. பாடலின் நடுவே 'இருங்க பாய்' என்ற வசனம் வருவது இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.