தனது மகனும் நடிகருமான விஜயுடன் எடுத்த புகைப்படத்தை தன் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்... அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய், இதய பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரை, விஜய் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்... இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இதை தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்,
"உறவும், பாசமும் மனித மனதின் மாமருந்து" என்று பதிவிட்டுள்ளார்...