தன்னை குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வரும் நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என நடிகை ஹனிரோஸ் எச்சரித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடாமல் ஹனி ரோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்த நபர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு செல்லாததால், பல நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளால் தன்னை குறித்து ஆபாசமாக பேசி வருவதாக சாடியுள்ளார். பணபலத்தால் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நபர், இந்த செயலை தொடர்ந்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.