ஆந்திராவில் மாறிய நிலை - ஷங்கரின் `கேம் சேஞ்சர்' படத்திற்கு வந்த புது சிக்கல் | Game Changer

Update: 2025-01-09 02:32 GMT

ஆந்திராவில் கேம் சேஞ்சர் படத்திற்கு எதிர்பார்த்த வசூலை ஈட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படம், பொங்கல், சங்கராந்தியை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. ஆந்திராவில் இந்த படத்திற்கு 14 நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. விதிகளுக்கு மாறாக அனுமதி வழங்கப்பட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டினார். இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், 10 நாட்களுக்கு மட்டும் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகே கேம் சேஞ்சர் படம் தமிழில் வெளியாகும் நிலையில், ஆந்திராவிலும் புதிய சிக்கல் எழுந்துள்ளதால், எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்