காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் கொள்கை தோற்றுப் போய் விட்டது என்று திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய விவகாரம்....
பொறுப்பற்ற முறையில் பேசி வருவதை ஆ.ராசா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கண்டிப்பு....
திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்ய, பாஜக, சங்பரிவார் அமைப்புகள் செயல்படுத்த தொடங்கியதன் ஒரு பகுதிதான் சீமான் என விசிக விமர்சனம்...
பெரியார் குறித்து பரவும் வதந்திகளை சீமான்தான் பரப்பியதாக திராவிடர் கழகம் குற்றச்சாட்டு....
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்றும் நாளையும் நின்று செல்லும்...
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி தற்காலிகமாக நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவிப்பு....
சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு..
விமானியின் சாமர்த்தியத்தால் 148 பேர் உயிர் தப்பினர்..
திருமண ஆவணப் பட விவகாரத்தில், நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு.....
இறுதி விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்....