புஷ்பா-2' படத்தின் கூடுதல் காட்சி - ஜன.17ம் தேதி ரிலீஸ்

x

புஷ்பா-2 படத்தில் கூடுதலாக இருபது நிமிட காட்சிகள் ஜனவரி 17ந் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா-2 படம் இதுவரை ஆயிரத்து 831 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து, பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மொத்தம் படத்தின் நீளம் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் உள்ள நிலையில், கூடுதலாக 20 நிமிடங்களை சேர்த்து ஜனவரி 17ந் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக புஷ்பா 2 படத்தின் ரீலோடட் வர்ஷன் வெளியீடு ஜனவரி 11ந் தேதிக்கு பதிலாக 17ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்