ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தும், இடையில் உருவான தீர்க்க முடியாத இடைவெளியால், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக தெரிவித்திருக்கிறார் அவரது மனைவி சாய்ரா பானு...
தமிழ் மண்ணில் இருந்து புறப்பட்டு, உலக அரங்கில் இந்திய சினிமாவின் முகமாக மாறி நம்மை பெருமைக் கொள்ளச் செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்வில் வெடித்திருக்கும் இந்த பூகம்பம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது..
ஏ.ஆர்.ரஹ்மானும் - சாய்ராவும் கடந்த 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சென்னையில் வைத்து ஒருவரையொருவர் கரம் பிடித்திருந்தனர்..
திருமணத்திற்கு பெண் பார்க்க கூட தனக்கு நேரம் இல்லாத சூழலில், தனது தாயார் விருப்பப்படி அவர் கூறிய பெண்ணான சாய்ராவையே தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான் ...
இந்நிலையில், சாய்ராவுடனான தனது 29 வருட பந்தத்தில், கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என ரஹ்மானுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்..
இதில், மூத்த மகளான கதீஜாவுக்கு இரு வருடங்களுக்கு முன்புதான் தம்பதி இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்திருந்தனர்...
இந்நிலையில், ஏ.ஆர் ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியின் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய முடிவெடுத்ததாக கூறியிருக்கும் சாய்ரா பானு , ஆழமான யோசனைக்கு பிறகே இந்த முடிவை இருவரும் எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்..
இந்த சவாலான தருணத்தில் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்...
கூடவே, ஏ. ஆர். ரஹ்மானின் மகனான ஆமீன், இந்த நேரத்தில் தங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என இன்ஸ்டா பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தலைகாட்டாதா சாய்ரா பாணு, மிகவும் அரிதாக ஏர்.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, இருவரும் ஜோடியாக மக்களின் மனதை கவருவதில் தவறியதில்லை..
இந்த சூழலில் தம்பதியின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது...
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்..
கூடவே, தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடப்பாண்டில் தங்களின் மனைவிகளை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது...