மர்மமான முறையில் ஆம்னி பேருந்தில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு.. கர்ப்பிணி மனைவியை காண சென்றபோது நேர்ந்த சோகம்
சென்னையில் இருந்து ஆலங்குளம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரமேஷ் என்பவர், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை காண ஆம்னி பேருந்தில் பயணித்தார். இந்நிலையில் திருமங்கலம் அருகே பேருந்து சென்றபோது, அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷின் உடலை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.