மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அம்மாநில பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், நமோ செயலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால மகாயுதி அரசின் மூலம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த அரசு அடுத்த ஐந்து ஆண்டு காலம் நீடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுனரையும் அதிகாரப்படுத்த மகாயுதி அரசு முயற்சிப்பதாக தெரிவித்த பிரதமர், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகத்தினர் ஒன்றுபட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலை தொடர்ந்து பலவீனமடைய தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸுக்கு எதிராக எந்த வலிமையான சக்தியும் இருக்கக் கூடாது என்பதால், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி சமூகத்தினரை பிளவுபடுத்த காங்கிரஸ் நினைப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, அனைவருக்கும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் கிடைத்து, அனைவரும் ஒன்றாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான், தங்கள் அரசின் தொலைநோக்குப் பார்வை என்றும் குறிப்பிட்டார்.