கதவை திறந்ததும் சக ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மர்ம முறையில் இறந்து கிடந்த டோல்கேட் ஊழியர்
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கவரை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பவராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வந்தார். இரவு பணிக்குச் சென்ற அவர், பணி முடிந்து சுங்கச்சாவடி அருகே ஓய்வறைக்கு சென்றார்.
சக ஊழியர்கள் காலை உணவு சாப்பிட சந்தோஷ் குமாரை அழைக்க ஓய்வறைக்குச் சென்று பார்த்தபோது மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, சந்தோஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தோஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.