பசி மயக்கத்தில் சென்ற மாணவர்கள்.. உணவில் நெளிந்த புழு..சோதனையில் இறங்கிய அதிகாரிகள்
திருவார் மத்திய பல்கலைகழக கேண்டின், உணவில் புழு பூச்சிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு, உணவகத்தின் சமையல் அறை மற்றும் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தது. புழு இருந்த புகார் தொடர்பாக, கேண்டினை நடத்தும் தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனம் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் சுகாதார துறை மூலம் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.