வாட்ஸ் அப் மூலம் தூத்துக்குடி நபரிடம் ரூ. 37 லட்சம் சுருட்டிய நைஜீரியா நபர்

Update: 2023-01-02 08:06 GMT

தூத்துக்குடியில், போலி வாட்ஸ் அப் எண் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெடிலிஸ்.,இவர் தூத்துக்குடியை சேர்ந்த க்ளாட்வின் மனோஜ் என்பவரை போலி வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அதில், டோகாவில் செயல்பட்டு வரும் விலங்குகள் நல நிறுவனத்திற்கு, மகாராஷ்டிராவில் உள்ள எண்டர்பிரைசஸ் மூலம் மருந்து பொருட்களை பெற்று ஏற்றுமதி செய்து வைக்க கோரியுள்ளார்.

இதனை நம்பிய க்ளாட்வின் மனோஜ் ஏற்றுமதிக்காக சுமார் 37 லட்சம் ரூபாய் வரை பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், போலி வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பெடிலிஸ், தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வரவே, அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்