
குருவிக்கூட்ட போல அன்பால மட்டுமே பிண்ணி பிணையபட்டிருந்த குடும்பத்துல, யாரோ ஒரு நபர் கல்லவிட்டு கலைச்சிட்டாங்கன்னா அத்தனை வர்ஷமா கஷ்டப்பட்டு அந்த கூட்ட உருவாக்குனவங்க எப்படி தவிச்சு போய்டுவாங்கன்றத ஜே பேபி திரைப்படத்துல காட்டி இருப்பாங்க.
உண்மை சம்பவத்த தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்துல ஜே பேபி கதாபாத்திரத்துல நடிச்சிருந்த ஊர்வசி, குடும்பத்துல நிம்மதி இல்லான மனசளவுல எவ்வளவு பாதிப்புக்குள்ளாவங்கன்றத படம் பார்க்குற நம்மளயும் ஃபீல் பண்ண வெச்சிருந்தாங்க...
அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போயிடுற ஜே பேபியும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் கடைசியில பிரிஞ்ச உறவுகள் அன்பால எப்படி ஒன்றிணையுறாங்கன்றதயும் இந்த திரைப்படத்துல இயக்குனர் சுரேஷ் மாரி தத்ரூபமா காட்சி படுத்தி இருந்தாரு.
கிட்டதட்ட ஜே பேபி கதாபாத்திரம் மாதிரியே இங்கேயும் ஒரு அம்மா மன நிம்மதிய இழந்து அவங்க குடும்பத்தயே படாதப்பாடு படுத்தி இருக்காங்க.
ஆனா, அன்பால பாட்டிய மீட்டெடுத்து பொறுப்ப கவனிச்சிருக்க வேண்டிய பேரன், அவங்கள சுத்தியால அடிச்சி கொன்னு போட்டு இருக்காரு.
என்ன நடந்துச்சுனு தெரிஞ்சிக்க பொன்னோரி செய்தியாளர் பாஸ்கரனோட விசாரணையில இறங்கினோம்.
கொல்லப்பட்ட பாட்டியோட பேரு சரஸ்வதி..
அவரோட வயசு 85... திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டு புதுநகர் பகுதியில உள்ள மகள் பிரேமா வீட்டுல தான் கடைசி காலத்த கடத்தி இருக்காங்க.
கடந்த சில வருடங்களாவே சரஸ்வதி பாட்டிக்கு மனநலம் சரியில்லாம போயிருக்கு... அதோடு அவர் கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டு அதுல இருந்து மீண்டு வந்திருக்காங்க.
அவங்களோட கடைசி ஆசை விருப்பம் எல்லாமே பெற்ற குழந்தைகளும் அவங்களோட குடும்பமும் சந்தோசமா இருக்கனும் அப்படிங்குறது தான். ஆனா, லாரி டிரைவரா வேலை பார்த்து வந்த பிரேமாவோட மகன் பத்மநாபன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கொலை கேஸ்ல கைதாகி இருக்காரு. அதுமட்டுமில்லாம பத்மநாபன் மேல கஞ்சா, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல கேஸும் இருந்திருக்கு.
இந்த சூழல்ல சமீபத்துல ஜாமீன்ல வெளிய வந்த பத்மநாபன் அவரோட பாட்டி சரஸ்வதிய கவனிச்சிட்டு இருந்திருக்காரு.
ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி பாட்டி அடிக்கடி வீட்ட விட்டு ஓடிப்போயிருவாங்கன்றதால, அவங்கள கட்டில்லயே இரும்பு சங்கிலியால கட்டிப்போட்டு பராமரிச்சி இருக்காங்க.
சம்பவம் நடந்த அன்னைக்கு சரஸ்வதி பாட்டி பாத்ரூம் போய்ட்டு வரட்டும்னு சங்கிலிய கழட்டி விட்டு இருக்காரு பத்மநாபன்.
இது தான் தன்னோட லாஸ்ட் சான்ஸ்னு பாட்டி நினைச்சாங்களோ என்னவோ வீட்டவிட்டு எஸ்கேப் ஆகி இருக்காங்க. இதனால அதிர்ந்து போன பத்மநாபன் அவர்ர பல இடங்கள்ல தேடி ஒருவழியா கண்டுபிடிச்சு வீட்டுக்கு பத்திரமா அழைச்சிட்டு வந்திருக்காரு.
காலையில இருந்து பாட்டி எதுவுமே சாப்பிட்டு இருக்க மாட்டாங்க அப்படிங்குறதால பாசமா சப்பாத்தி வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லி வற்புறுத்தி இருக்காரு. ஆனா, சரஸ்வதி பாட்டி பேரன் கொடுத்தத சாப்பிட மறுத்து இருக்காங்க. வயசான காலத்துல அதுவும் மனநோயால பாதிக்கப்பட்டவர அன்பா கவனிச்சு இருக்க வேண்டிய பேரன் சரஸ்வதி பாட்டி மேல கோபப்பட்டு இருக்காரு.
ஒருக்கட்டத்துல இந்த கிழவியோட டார்ச்சர் தாங்க முடியலனு வீட்டுல இருந்த சுத்தியாலயே அவர்ர அடிச்சு கொடூரமா கொலை செஞ்சி இருக்காரு.
நடந்த சம்பவம் தொடர்பா கொலை கேஸ் ரிஜிஸ்டர் பண்ண போலீஸ் கொலையாளி பத்மநாபன்ன கைது பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க. 85 வயசு பாட்டிய பேரன்னே அடிச்சு கொலை செஞ்ச சம்பவம் அப்பகுதியில உள்ளவங்கள சோகத்துல ஆழ்த்தி இருக்கு.