சென்னையில் பிரபல நடிகர் வீட்டின் முன் பாஜக பிரமுகரின் மனைவி செய்த காரியம் - பரபரப்பு CCTV காட்சிகள்
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கராத்தே கார்த்திக். வழக்கறிஞரான இவர், திரைப்பட துணை நடிகராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தங்கள் பகுதியில், பாஜக பிரமுகர் வெங்கடேசன் எற்படுத்திய சட்டவிரோத கழிவு நீர் இணைப்பு குறித்து புகாரளித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த கழிவு நீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள், துண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசனின் மனைவி கிருஷ்ணவேணி, கராத்தே கார்த்திக் வீட்டிற்கு செல்லும் பாதையில் கழிவு நீரை கொட்டியுள்ளார். இதனையடுத்து கராத்தே கார்த்திக், இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கழிவு நீர் கொட்டியது குறித்து கேட்டபோது, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.