புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதாக தனிநபர் ஆணையம் தெரிவித்துள்ளது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு நீதிபதி சத்யநாராணயன் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையம் 2-வது முறையாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வழக்கின் போக்கு, முன்னேற்றம், விசாரணை குறித்து தனிநபர் ஆணையத்திடம் எடுத்துரைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனிநபர் ஆணைய தலைவர் சத்யநாராயணன், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்வதாக கூறினார்.